பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 'வையtதினில் வறுமையோர் கொடுமையன்ருே' என்று எழுதியிருக்கவும் மாட்டார். எப்படியாவது செல்வம் சேர்க்கவேண்டும் என்பது பாரதியார் மதம். மிகுந்த செல்வம் இருந்தால் அதை எப்படிச் செலவழித் திருப்பார் என்பது வேறு விஷயம். ஆனல் அவர் பயனுள்ள செயல்களுக்குத்தான் செலவு செய்வார் என்பது நிச்சயம். பிற்காலத்தில் தமது அதிக நூல்களை வெளியிட வேண்டு மென்றும், அதற்கு நிதி வேண்டுமென்றும் எதிர்பார்த்து மிகவும் நம்பிக்கையுடன் ஒரு திட்டத்தை வெளியிட்டார். ஆளுல், தமிழ் மக்கள் அதைக் கவனியாமல் இருந்து விட்டது பெரிதும் வருந்துதற்குரியது. இதற்காகச் சோர்வோ, ஏமாற்றமோ அவர் அடைந்ததாகத் தெரிய வில்லை. ஆனல் செல்வம் சேர்க்கவேண்டும் என்றுமட்டும் பல இடங்களில் தமது எண்ணத்தை வெளியிட்டுள்ளார். "தராசு" என்ற நூல் சொல்கிறது; பூரீமான் காந்தி வாசம் செய்யும் ஆமதாபாதில் ஸத்யாக்கிரஹ ஆசிரமம் ஏற்படுத்தியிருக்கிருர். அந்த ஆசிரமத்தில் யெளவனப் பிள்ளைகள் பலரை வைத்துக் கொண்டு அவர்களை தேச ஸேவைக்குத் தயார் படுத்துகிருர். அவருடைய ஆசிர மத்திலே பயிற்சி பெறுவோருக்குச் சில விரதங்கள் அவசிய மென்று ஏற்படுத்தியிருக்கிரு.ர். உண்மையிலே லோகோப காரம் செய்ய விரும்புவோர் எல்லோருமே மேற்படி விரதங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்பது அவருடைய கொள்கை. கிறிஸ்தவ சங்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் அந்த விரதங்களைக் குறித்துத்தான் பேசினர். விசேஷமாக அவர் வற்புறுத்திச் சொல்லிய விஷயங்கள் பதினென்று. அவை பின்வருமாறு :1. ஸத்ய விரதம் 2. அஹிம்லாவிரதம் 3. பிரமசரியம் 4. நாக்கைக் கட்டுதல் 5. உடைமை மறுத்தல் 6. சுதே சியம் 7. பயமின்மை 8. திண்டல் 9. தேசபாஷை