பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ஏழ்கட லோடியுமோர் - பயன் எய்திட வழியின்றி இருப்பதுவும், வீழ்கஇக்கொடு நோய்தான் - வைய மீதினில் வறுமையோர் கொடுமையன்ருே? பtrற்க்ட விடைப் பிறந்தாள் - அது பயந்தநல் லமுதத்தின்,பான்மைகொண்டாள்; ஏற்குமோர் தாமரைப்பூ - அதில் இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்: நாற்கரந் தானுடையாள் - அந்த நான்கினும் பலவகைத் திருவுடையாள்: வேற்கரு விழியுடையாள் - செய்ய மேணியன் பசுமையை விரும்பிடுவாள். நாரணன் மார்பினிலே - அன்பு நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்: தோரணப் பந்தரிலும் - பசுத் தொழுவிலும், சுடர்மணி மாடத்திலும், வீரர் தந் தோளினிலும் . உடல் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் பாரதி சிரத்தினிலும் . ஒளி பரவிட வீற்றிருந் தருள்புரிவாள். பொன்னிலும் மணிகளிலும் - நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும், கன்னியர் நகைப்பினிலும் . செழுங் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும், முன்னிய துணிவினிலும் . மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பன்னிநற் புகழ்பாடி - அவள் பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம், {