பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

需 8 வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்; வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர் வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர், மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர், வீர மன்னர்பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) 4. தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம், தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்: உய்வ மென்ற கருத்துடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம்: செய்வ மென்ருெரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்; கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்) செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்! சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்! வந்த னம்இவட் கேசெய்வ தென்ருல் வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்! மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை வரிசை யாக அடுக்கி அதன்மேல் சந்த னத்தை மலரை இடுவோர் சாத்தி ரம்இவள்பூசனை யன்ரும். (வெள்ளைத் வீடு தோறும் கலையின் விளக்கம், வீதி தோறும் இரண்டொரு பள்ளி; நாடு முற்றிலும் உள்ளன ஆர்கள் நகர்க ளெங்கும் பல பல பள்ளி: 6.