பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I0. II. 12. 13. 14. 53 ஈதுநல் விந்தை! - என்ன! ஈதுநல் விந்தை! புத்தன் சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன) பாய்ந்ததங் கொளியே! - பின்னும் பாய்ந்ததங் கொளியே! - அருள் தோய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன) கிருஷ்ணுர்ஜுன தரிசனம் குன்றத்தின் மீதே - அந்தக் குன்றத்தின் மீதே . தனி நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன். (கன) தேரின் முன் பாகன் - மணித் தேரின் முன் பாகன் - அவன் சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன) ஒமென்ற மொழியும் - அவன் ஒமென்ற மொழியும் - நீலக் காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும் (கன) அருள் பொங்கும் விழியும் - தெய்வ அருள் பொங்கும் விழியும் - காணில் இருள்பொங்கு நெஞ்சினர் வெருள்பொங்குந் திகிரியும். (கன) கண்ணனைக் கண்டேன் - எங்கள் கண்ணனைக் கண்டேன் - மணி வண்ணனை ஞான மலையினைக் கண்டேன், (க்ன) சேனைகள் தோன்றும் - வெள்ளச் சேனைகள் தோன்றும் - பரி யானையுந் தேரும் அளவில தோன்றும். (கன)