பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. வேள்வித் தீ (குறிப்பு : இக் கவிதையைப் பற்றி சுவையான செய்தி ஒன்று, "பாரதி நினைவுகள்’ என்ற, திருமதி யதுகிரி அம்மாளின் நூலிலே காணப்படுகிறது. பாரதியார் எந்தக் கவிதை புதிதாகப் படைத்திருந் தாலும், உடனே அதைப் பலருக்குப் படித்துக் காட்டுவாராம். இக் கவிதையை இயற்றினபோதும் அவ்வாறே படித்துக் காண்பித்தார். ரிஷிகள் என்ற பகுதி வந்த விடத்து உணர்ச்சியோடு உச்சஸ்தாயியிலும், அாரர் என்ற பகுதி வந்தபோது மெலிந்த ஸ்தாயியிலும் பாரதியார் பாடிக் காட்டினராம். அருகில் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மனைவியார் திருமதி செல்லம்மாவுக்கு அழுகை அடக்க முடியவில்லை: கண்ணிர் விட்டுக் கொண்டே கேட்டாராம். 'ஏன், அசுரர் மாய்ந்தொழிந்து போவதில் அத்தனை வருத்தமோ?' என்று கேட்டார் பாரதியார். "இல்லை. அதற்காகக் கண்ணிர் விடவில்லை. நீங்கள் எந்தப் பாட்டுப் பாடினலும் உணர்ச்சியோடு பாடுவதால் கண்ணிரை அடக்க முடிவதில்லை" என்று திருமதி செல்லம்மா பதிலளித்தார். "இந்தப் பாட்டை எழுதிக் கொடுத்தால் ஊருக்குச் செல்லும்போது எடுத்துக்கொண்டு செல்வேன். ஆனல் போலீஸ்காரர் தொல்லைதான் பெருந்தொல்லையாக இருக் கிறது. சென்ற தடவை பாரதியார் பாட்டு என்றவுடனே um. s.—5