பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அதைப் பிடுங்கிக் கொண்டார்கள்' என்று வருத்தத் தோடு தெரிவித்தாள், திருமதி யதுகிரி அம்மாள். 'யதுகிரி, நீ அந்தப் பாடலுக்கு அக்திஹோமம் என்று தலைப்பிலே பெரிய எழுத்தில் எழுதி விடு. போலீசார் பொருள் தெரியாமல் விட்டுவிடுவார்கள்.” என்று தமது இயல்பான நகைச்சுவையுடன் பதிலளித்தார் பாரதியார். யதுகிரி அம்மாள் செல்லும்போது வழக்கப்படி சோதனை நடந்தது. பாரதியார் கூறியது போலவே, 'வேள்வித் தீ என்ற அழகிய கவிதையை விட்டுவிட்டார் கள்! பாரதியார் "வலிமை மைந்தன் சுகமா?' என்று கேட் டாராம். முதலில் அனைவரும் பொருள் தெரியாது மெளன மாக இருந்தனர். 'புதுச்சேரியில் புயற்காற்று பலமாக அடித்தபோது அந்தக் குழந்தை பிறந்தது. அதனால் வலிமை மைந்தன் என்று சொன்னேன்” என்று விளக்கிய போதுதான் அனை வருக்கும் புரிந்தது. வலிமை மைந்தன் என்ற சொற்ருெடரை இங்கே பாரதியார் கையாண்டிருப்பது கவனத்திற்குரியது.) ரிஷிகள் எங்கள் வேள்விக் கூடமீதில் ஏறுதே தீ தீ - இந்நேரம் பங்கமுற்றே பேய்க ளோடப் பாயுதே தீ தீ! - இந்நேரம். I அசுரர்: தோழரே, நம் ஆவி வேவச் குழுதே தீ தீ! - ஐயோ! நாம் வாழ வந்த காடு வேவ வந்ததே தீ தீ - அம்மாவோ! 2