பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

பெற்றுவருகிறது. ஜனஸ்பையார் நியாயமில்லாத சட்ட கள் செய்தால், அடுத்த தடவை ஜனங்கள் தம்மை தள் விடுவார்கள் என்ற பயம் இருக்கவேண்டும். ஜன களுடைய அதிகாரத்திற்குட்படாத சட்டஸ்பையார் மை போனபடியெல்லாம் சட்டம் போடுவார்கள். அதி: பல விபரீதங்கள் ஏற்படும். வாக்குச்சீட்டு (வோட விஷயத்தில் பலவித அனுஷ்டானங்கள் இருக்கின்றன இங்கிலாந்திலே வாக்குச் சீட்டுப்போடும் உரிமை சிலரு கில்லை. பிரான்ஸ் தேசத்திலே எல்லாரும் சீட்டுப்போடலா அமெரிக்காவிலே பல ஜில்லாக்களிலே பெண்க ஜனஸ்பைக்குச் சீட்டுப் போடுகிறார்கள். இந்த முறைை தேசமுழுமைக்கும் பொதுவாக்கி, ராஜ்யத்தில் ஆணையு பெண்ணையும் நிகராக்கி விடவேண்டும் என்று அந் நாட்டிலே மிஸ்டர் ஹியூஸ், மிஸ்டர் வில்ஸன் போன் பெரிய செல்வாக்குடைய தந்திரிகள் விரும்புகிறார்கள் கூடிய சீக்கிரத்தில் அமெரிக்காவில் எல்லா நாடுகளிலு பெண்சீட்டு வழக்கமாய் விடும் என்று தோன்றுகிறது வாக்குச் சீட்டே புருஷலக்ஷணமென்று மேற்கு தேசத்தா சொல்லிக்கொண்டு வந்தார்கள். இப்போது பெண்ணுக்கு கூட அந்த உரிமை இல்லாவிட்டால் இழிவு என்! தீர்மானம் செய்துவருகிறார்கள்.

21. தராசும் காந்தியடிகளும்

(குறிப்பு : காந்தியடிகள் தமது ஆமதாபாத் ஸத்யாக்கிரஹ ஆசிரமத்தில் தேச ஸேவைப் பயிற்சிக்காக அங்குள்ளவர்களுக்கு 11 விதிகள் ஏற்படுத்தியிருக்கிரு.ர்.அதைப்பற்றிஒய்.எம்.ஸி.எ. வாலிப சங்கத்தில் அவர் பேசியதைப்பற்றித்