பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128

உணவுப்பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. கார ஸாரங்களும் வாஸனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப் படுத்தும் வஸ்துக்கள் தேகபலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டா வதுபோல், பதிர்பேணியினும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.

u

சரீரத்தை வியர்க்க வியர்க்க உழைத்தால் நல்ல பசி யுண்டாகும். நல்ல பசியாயிருக்கும்போது கேப்பைக் களியை வேண்டுமளவு தின்று சுத்த ஜலத்தைக் குடித்தால் போதும். விரைவிலே பலம் சேர்ந்துவிடும். பிள்ளைகளே இஷ்டப்படி நீஞ்சுதல், மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலே போகவொட்டாதபடி. தடுக்கும் பெற்றேர் தாமறியாமலே மக்களுக்குத் தீங்கு செய்கி முர்கள்.

வயது மேலும் சரீர வுழைப்பும் விளையாட்டுக்களும் மிகவும் வாலிபப் பருவத்திலே யிருக்கும் பிள்ளைகளுக்கு மாத்திரந் தான் பொருந்துமென்று ஒரு தப்பெண்ணம் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது. மனிதனுக்கு இயற்கை வயது நூரி ஆகையால் ஐம்பது வயதாகும்வரை ஒருவன் இள:ை தீர்ந்தவனகமாட்டான். பிஞ்சிலேயே உடம்பை நாசப்படுத் தினல் சீர்கெட்டுக் குலைந்துபோய் இருபது வயதாகுமுன் கிழத்தன்மை வந்துவிடும். எனிலும், இயற்கை விதிப்பு: ஐம்பது வயதுவரை இளமை நிற்குமாகையால், அத! குள்ளே செயற்கைக் கிழத்தன்மை பெற்றாேர் தமது: பைத் திருத்தி நல்லநிலைமைக்குக் கொண்டுவர முயற்சி