பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


131

தெய்வத்தை நம்பி அதனிடம் பாரத்தைப் போட்டுவிட்டுத் தொழில் செய்வதே இன்பம் எய்துவதற்கு ஏற்ற வழி என்கிறார் கவிஞர். தன்னை மறந்து தொழிலிலே, கர்மத்திலே ஈடுபட வேண்டும். இதுவே கீதாசாரியன் காட்டிய பாதை. ஸ்வதந்திரம், ஸ்மத்துவம், ஸ்கோதரத்வம் என்ற லட்சியங்களைக் கொண்டு இந்தியா வார இதழ் நடைபெற்று வந்தது. ‘நீதி, ஸமாதானம், ஸ்மத்துவம், அன்பு இவற்றாலேயே இவ்வுலகத்தில் தீராத தைரியமும், அதனலே தீராத இன்பமும் எய்தலாம். வேறு வழியில்லை என்று பாரதியார் நன்கு எடுத்துக் காட்டுகிரு.ர்.) உலக வாழ்க்கையில் மானிடராலும் மற்ற உயிர்களா லும் விரும்பப்படும் மிகச்சிறந்த பயன் யாது? எப்போதும் மாருத, எப்போதும் குறையாத இன்பமெய்தி வாழ்தல். இவ் வகையான இன்பத்தை எய்தும் பொருட்டாகவே மானிடர் கல்வி கற்பதும், பொருள் சேர்ப்பதும், தவங்கள் செய்தலும், அரசாள்வதும், களவு செய்தலும், கொலை செய்வதும், பேசுதலும், சிரித்தலும், ஆடுதலும், பாடு தலும், அழுதலும், உழுதலும்-எல்லாத் தொழிலும் செய் கிறார்கள். மனிதர் மட்டுமேயன்றி மற்ற எல்லா உயிர் களும், தாம் செய்யும் எல்லாத் தொழில்களையும் மேற் கூறிய ஒரே நோக்கத்தோடுதான் செய்கின்றன.

ஆயினும், இதுவரை மேற்படி நித்யானந்த நிலையை எந்த உயிரும் எய்தவில்லையென்பது தெளிவு. உலகத்தில் தவிர்க்க முடியாத துக்கம் நிறைந்திருப்பதே, புத்தர் கண்ட காகக் கூறப்படும் நான்கு உண்மைகளில் முதலாவது. இங்ஙனம் தீராத துன்பம் இருப்பதற்குக் காரணம், வவ்வோர் உயிரும் தன்னையேனும் பிற உயிர்களையேனும்