பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


133.

குழைத்துக்கொண்டு ஒடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டியபோதிலும், மனம் அவற்றில் நிலைபெருமல், மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக்குழியிலே கண்ணேத் திறந்துகொண்டு போய்விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.

மனம் கலங்கிய மாத்திரத்தில் புத்தி கலங்கிப்போய் விடுகிறது. ஆகையால், புத்தியை நம்பி எவனும் மனத்தைக் கலங்கவிடாதிருக்கக் கடவன். மனத்தைக் கலங்க விடா மல் பயிற்சிசெய்வதே எல்லாவித யோகங்களிலும் சிறந்த யோகமாகும். மனம் தவறி ஒரு துன்பக் குழியில் போய் விழுங்காலத்தில், புத்தி சும்மா பார்த்துக்கொண்டு நிற்கிறது. ஒரு வேளை புத்தி தடுத்தபோதிலும், அதை மனம் கவனிப்பதில்லை. புத்தியை மீறி உழலும் சக்தி மனத்துக்கு இருக்கிறது.

ஆதலால், மனம் துன்பத்தில் நழுவி விழத்தொடங் இம்போது, அதை உறுதி அல்லது தைர்யம் என்ற டிேவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சியாம். இந்தப் பயிற்சி ஏற்படுத்திக்கொள்ளு மாறு சிலர் உலகத்தைவிட்டு நீங்கித் தனியிடங்களிலிருந்து கண்ணே மூடிக்கொண்டு பழகுகிறர்கள். வேறு சிலர் ச்ேசைப் பல இடங்களில் கட்டியும், அவயவங்களைப் லெவாறு திருப்பியும் பழகுகிறார்கள்; தனியே இருந்து ஜபம் பண்ணிப் பார்க்கிறார்கள்.

இதிலெல்லாம் இது வேகாது. உலகத்தாருடன் கூடி, இல்லா வகைகளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே தொழில் செய்துகொண்டு, உலக விவகாரங்களை நடத்திய “ண்ணமாகவே, சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடி தன் “த்தைக் கட்டக்கூடிய திறமையே பயன்தரக் கூடியது. ‘ற்ற முயற்சிகளெல்லாம் வீண்.

9,F .LffT