பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


172

ஆனல் அது 1910-இல் நிகழ்ந்தது. இங்கு குறிப்பிடப்படுவது 1917-இல் ஏற்பட்டது. சாதாரண ஆண்டில் தோன்றியது 75 ஆண்டு களுக்கு ஒரு முறை வானவெளியில் தோன்றுவது. அதற்கு ஹால் தூமகேது என்று பெயர்.

ஏதாவது ஒரு நம்பிக்கை அல்லது பழக்கம் ஆழமாகப் பதிந்துவிட்டால், அது தவறு என்று தெரிந்தபோதும் மாற்றுவது எவ்வளவு கடினம் என்பதை இன்றைய விஞ்ஞான உலகத்திலும் காண்கிருேம்.)

ஸ்ந்தோஷராயர் : ஏப்ரல் மாதம் 22-ந் தேதி ஒரு வால் நக்ஷத்திரம் எரி நக்ஷத்திரம் ஒன்றைத் தன் வாயில் கவ்விக்கொண்டு வந்து பூமியின்மேல் மோதப்போவதாக வும் அதனால் இந்த பூமண்டலம் தூள் தூளாக நொறுங்கி விடப் போவதாகவும் சொல்லுகிறார்களே? அது வாஸ்தவ மாக இருக்குமா?

காளிதாஸன் பொய்க் கதை

லந் : உமக்கெப்படித் தெரியும்? அமெரிக்கா தேசத் தில் யாரோ ஒரு பெரிய வான சாஸ்திரப் பண்டிதர் சொல்லியிருக்கிருராமே? அது பொய்யென்று நீர் எப்படிச் sg lo t?

காளி : பொய்க் கதைதான். எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நீர் என்னிடம் வந்தி சேரும். அப்போது காரணங்கள் சொல்லுகிறேன்.

ஸ்ற் : பூமி தூளாய்ப் போனபிறகு நான் வந்து கேட்பதெப்படி? நீர் விடை சொல்வதெப்படி?