பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

போதுமே கிடையாது. எனக்கும் பசியில்லை. ஆதலால், நானும் இங்கேயே உம்மோடு சிறிது நேரம் பொழுது போக்கத் தயாராக இருக்கிறேன். இந்த இடத்தில் ஒரு சபை கூடிப் பேசினல் மிகவும் நன்முக இருக்கும். என்ன செய்யலாம்? அந்தச் செம்படவன் பேச வரமாட்டான். அவன் மீன் கிடைக்கவில்லை யென்று என் மேலே கோபித் துக் கொள்ளுகிருன். நீரோ பத்திரிகையிலுள்ள அண்டப் புளுகுகளையெல்லாம், வேத வுண்மை போலே கருதி, மஹா சிரத்தையுடன், நுழைந்து நுழைந்து வாசித்துக் கொண் டிருக்கிறீர். விடுங்காணும்! பத்திரிகையை அப்பாலே போடும். காற்று மிகவும் ரஸமாக வீசுகிறது. எனக்கு இந்த இடத்தை விட்டுப் போக மனதாகவில்லை. ஏதாவது பேச் செடும்’ என்று சொன்னர்.

விதியே சேஷய்யங்கார் ரூபமாக வந்து நம்மைப் பேச்சுக்கிழுக்கிற தென்பதை நான் தெரிந்து கொண்டு, பின்வருமாறு சொல்லலானேன் :

“ஸ்வாe, என்னல் வ ஞ் ச னை யி ல் லை. t_1 போடுவோம். அதைப்பற்றி யாதொரு ஆக்ஷேபமுமில்லை. ஆனல் உபந்யாஸ் மெல்லாம் நீர் தான் செய்ய வேண்டும். நீர் உபந்யாஸி, நான்தான் சபைக் கூட்டம். நடத்தும்” என்றேன்.

அதற்கு சேஷய்யங்கார் சொல்கிறார் :

‘நான் உபந்யாஸ் கர்த்தா; நீர் அக்ராஸ்ளுதிபதி: அந்தச் செம்படவன்தான் சபை’ என்றார்,

அப்போது, சற்று தூரத்திலேயிருந்த அந்தச் செம்பட பன் சொல்லுகிருன் :

‘சாமிமாரே, நீங்கள் வந்தாலும் வந்தீர்கள். எனக்கு ஒன்று மீன் கூட முழு மீனகக் கிடைக்கவில்லை."