பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6

நடைப் பகுதியிலும் இதே நிலைதான். ஏதாவது ஒரு கோணத்தில் பார்க்கின்றபோது அதற்கு ஏற்ற கவிதை உரைநடைப் பகுதிகளே ஒரே நூலில் கொடுப்பதுதான், படிப்போருக்குப் பாரதியாரின் சிந்தனைகளை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியாக இருக்கும். காந்தியடிகளின் சிந்தனைகளை மாணவருக்கு, பெண்களுக்கு என்ற தலைப்பு களில் தனித்தனி நூலாக வெளியிட்டபோதும், இப்படிப் பட்ட அடிப்படை நோக்கத்தைக் கொண்டே வெளி யிட்டார்கள். அம்முறையே இங்கும் பின்பற்றப் படுவதை வாசகர்கள் எளிதில் உணரலாம்.

ஆனல், கூடுமானவரை ஒரு கவிதை அல்லது கட்டுரை யைப் பல இடங்களில் சேர்ப்பதைத் தவிர்த்திருக்கிறேன்.

ஒரு சிலவற்றின் முக்கியத்தை எண்ணிப் பார்த்து அவற்றை மட்டும் இரண்டாம் முறையாகவும் வெளியிட வேண்டியதாயிற்று. அவற்றை விட்டால் அந்தத் துறை குறையுடையதாகவே காட்சியளிக்கும்.

பாரதியார் உள்ளம் மிகப்பல பட்டைகள் திட்டப் பெற்ற வைரமணி போன்றது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், அதில் ஒரு தனிப்பட்ட ஒளி அற்புதமாக வெளிப்படுவதைக் காணலாம். சங்கீதம் முதலிய கலைகள், தமிழகம், பாரததேசம், உலகம் இவற்றைப் பற்றி உரமூட்டக்கூடிய தெள்ளிய சிந்தனைகள், பெண் விடுதலை போன்ற பல்வேறு பிரச்சினைகள், சமூக சீர்திருத்தம், இவ்வாறு எத்தனை எத்தனை கோணங்களுக்கு பாரதியாரின் பரந்த உள்ளம் ஒளிகொடுத்திருக்கிறது!

இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும் போது தான் மஹாகவித்வம் என்ற மேதை உள்ளம் வியக்கத்தக்க தரிசனம் தருகின்றது.