பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. கண்ணிகள்

11-4-1906

புன்னகையு மின்னிசையும் எங்கொளித்துப் போயினவோ இன்னலொடு கண்ணி ரிருப்பாகி விட்டனவே! ஆணெலாம் பெண்ணுய் ஆரிவையரெ லாம் விலங்காய் மானெலாம் பாழாகி மங்கிவிட்ட திந்நாடே! ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநா டென்பது போய்ப் பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே! வீமாதி வீரர் விளிந்தெங்கு போயினரோ! ஏமாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே! வேத வுபநிடத மெய்நூல்க ளெல்லாம்போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே! ஆதி மறைக்கீதம் அரிவையர்கள் சொன்னது போய் வீதி பெருக்கும் விலையடிமை யாகினரே! செந்தேனும் பாலும் தெவிட்டிநின்ற நாட்டினிலே வந்தே தீப்பஞ்ச மரபாகி விட்டதுவே! மாமுனிவர் தோன்றி மணமுயர்ந்த நாட்டினிலே காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே! பொன்னு மணியுமிகப்பொங்கிநின்ற விந்நாட்டில் அன்னமின்றி நாளு மழிவார்க ளெத்தனைபேர்!

குறிப்பு : சமூக சீர்திருத்தம் கூறவந்த பாரதியார் இன்று உயிரோடு இருக்கவேண்டும். வர்ட்ஸ் வொர்; என்ற ஆங்கிலக் கவிஞன், மில்ட்டன் என்ற மகாகவியை பற்றி ஒரு சானெட் எழுதியுள்ளார். அதிலே, மில்ட்ட% விளித்து, ‘நீஇந்தச் சமயம் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதையே நானும் விரும்புகிறேன் விடுதலை பெற்ற இன்றைய இந்திய நாட்டிலும், காமுகரு