பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13

பேசிய தாயுமானவர், ஆனந்தக் களிப்புச் சந்தத்தையே கொண்டு, உலக வாழ்வு இன்பம் பெற வழிகாட்டியு பாரதியாரின் திறனை என்னென்று சொல்வது!

ஆகவேதான், தேசபக்த சிகாம ணியாகிய ஸ்ரீமான் எஸ். ரீநிவாச ஐயங்கார், பாரதியாருடைய பாட்டைப் பற்றிப் பேச வந்த போது, “அதிவேகமாகப் பறக்கும் திறத்தாலும், இறகுகளின் வர்ண வனப்பினாலும், உள்ளம் உருக்கும் பாட்டின் இனிமையாலும் செருக்குற்ற ஒரு பறவைக்கு இவர் பாட்டை ஒப்பிடலாம்’ என்று வியந்து போற்றுகிறார்,

பங்கிம் சந்த்ரபாபு இயற்றிய புகழ்பெற்ற வந்தே மாதர கீதத்திற்கு 1905-இல் பாரதியார் மொழி பெயர்ப்பாக ஒரு பாடல் இயற்றினர். அது இசையோடு பாடுவதற்கு ஏற்ற தாக இல்லையென்று அதே ஆண்டில் சந்தத்துடன் கூடிய புதிய மொழி பெயர்ப்பும் செய்கிறார். ஆனந்த மடம் என்ற தமது நாவலில் பங்கின் பாபுவின் கீதம் முதலில் வெளி யானபோது அதில் ஏழுகோடி என்று வங்க மக்களையே குறிக்கின்றது. ஆனல் ஏழுகோடியை அன்று கண்ட மக்கள் தொகையின் படி முப்பதுகோடி என்று இந்தியா முழு வதையும் குறிப்பதாக மாற்றியிருக்கிரு.ரி.

இரண்டு மொழிபெயர்ப்புகளும் பாடுவதற்கு எளிமை யாக இல்லை என்று கருதித்தான் போலும், ‘வந்தே மாதர மென்போம்’ என்ற இப் பாடலைத் தம் சொந்த முறையில் இயற்றித் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். முப்பது கோடியும் வாழ்வோம் என்னும் போது முப்பது என்பதில் மலைபோன்ற அழுத்தம் விழுந்திருக்கிறது. ஜாதி சமயம் முதலியவற்றால் பிரிக்க முடியாத வலிமையும் இதில் தொனிக்கின்றது. ஒளிபெற்ற கவிதைகளில் இது ஒன்றாகும்.