பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. ஓம் சக்தி

(குறிப்பு: அன்பை அடிப்படையாகக்கொண்டு மானிட ஜாதி இயங்கினல், உலகத்தில் ஏற்படு கின்ற பல தொல்லைகள் மறைந்து போகும் என்பதைப் பாரதியார் பல இடங்களில், கவிதை களிலும், உரைநடை இலக்கியத்திலும் வற் புறுத்தியிருக்கிறார். ஆனால், இந்த அன்பு வெறும் வாய்ப்பேச்சோடு நின்றுவிடக்கூடாது; செயலிலே காண்பிக்கப்பட வேண்டும். கொள்கைக்கும் செய்கைக்கும் உள்ள தூரம் மிக அதிகமாக இருக்கிறது என்று அவர் வருந்துகிறார். மேடை யேறிப் பேசும்போது ஆச்சரியப்படும்படியாக இருக்கும்; செய்கையிலே அ ந் த ப் பேச்சு அப்படியே நின்றுபோகும். இதுதான் மனித இனத்தைப் பிடித்துள்ள சாபக்கேடு. புத்த ருடைய அன்பு மதத்தைப் பற்றிப் பேசக் சொன்னுல் அற்புதமாகப் பலர் பேசுவார்கள். அவர்களுடைய வாழ்க்கைநெறி இந்தப்பேச்சுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

எத்தனையோ கட்டுப்பாடுகள், நியமங் களுக்கு நாம் உட்பட்டு நடக்கிருேம். ஒரு புதிய நியமத்தை ஏன் கைக்கொள்ளக் கூடாது?’ என்று பாரதியார் கேட்கிரு.ர்.

செல்வர்கள் தம்முடைய செல்வத்தை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டியதில்லை. அதைப் பயன்படுத்திச் சொல்வத்தை மேலும் பெருக்கிப் பலருக்குப் பயன்படும்படி செய்ய