பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

பறையனுக்குப் பார்ப்பானும், கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.

பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதை யெல்லாம்விட முக்கியமென்று நான் சொல்லுகிறேன். எவனும் தனது சொந்த ஸ்திரீயை அலகiயம் பண்ணுகிருன். தெருவிலே வண்டி தள்ளி நாலணு கொண்டு வருவது மேல்தொழில் என்றும், அந்த நாலணு வைக்கொண்டு நாலு வயிற்றை நிரப்பி வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் நினைக்கிருன். பெண்கள் உண்மையாக உழைத்து ஜீவிக்கிறார்கள். ஆண் மக்கள் பிழைப்புக்காகச் செய்யும் தொழில்களில் பெரும்பாலும் பொய், சூது,களவு, ஏமாற்று, வெளிமயக்கு, வீண் சத்தம்: படாடோபம், துரோகம், கொலை, யுத்தம்!

இந்தத் தொழில்கள் உயர்வென்றும் சோற்றுக்குத் துணி தோய்த்துக் கோயில் செய்து கும்பிட்டு வீடு பெருக்கிக் குழந்தைகளைக் காப்பாற்றும் தொழில் தாழ் வென்றும் ஆண் மக்கள் நினைக்கிறார்கள்.

வியபிசாரிக்குத் தண்டனை இஹலோக நரகம். ஆண் மக்கள் வியபிசாரம் பண்ணுவதற்கு சரியான தண்டனையைக் காணுேம்.

பர ஸ்திரிகளை இச்சிக்கும் புருஷர்களின் தொகைக்கு எல்லை யில்லை யென்று நான் சற்றே மறைவிடமாகச் சொல்லுகிறேன். ஆனல் அவர்கள் பத்திணிகளை நேரே அவர்கள் நோக்க யோக்யதையில்லாமல் இருக்கிறார்கள்.

பூமண்டலத்தின் துக்கம் ஆரம்பமாகிறது. ஆனும் பெண்ணும் ஸ்மானம். பெண் சக்தி. ஆண்...பெண் ணுக்கு ஆண் தலை குனியவேண்டும். பெண்ணே ஆண்