பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. தமிழ் நாட்டில் கல்வி தமிழ் நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டு மால்ை, சகல சாஸ்திரங்களும் தமிழ் பாஷை மூலமாக் வே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக் குள்ளே அறிவுடையோரெல்லோரும் கொண்டிருக்கிருர் கள். ஆனல் இதை அனுஸ்ரனைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை. ஐரோப்பிய ஸ்திரீயாகிய மிஸ்ஸஸ் பெஸண்ட் கூடச் சில தினங்களின் முன்பு பெங்களுரில் செய்த பிரசாங்க மொன்றிலே தமிழ் பாஷையை மிகவும் வியந்து கூறி, நாமெல்லோரும் தமிழ்ப் பயிற்சியில் தக்கபடி சிரத்தை செலுத்தாமல் இருப்பது. பற்றி வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. இப்படி நம்மைப் பார்த்துப் பிறர் இரக்கப் படும்படியான அவமான நிலை விரையில் நீங்க வேண்டுமென்று தேவர்களை வணங்கு கிருேம்.