பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 வாரத்தில் பிரசுரம் செய்வோம். தமிழ் நாட்டுத் தாய் மாரைப் பற்றிச் செந்தமிழ்' ஆசிரியர் எழுதியிருக்கும் உபந்தியாசத்தைப் படித்தபோது, எமக்குண்டான பெரு மகிழ்ச்சிக்கும் பெருந் துயரத்திற்கும் அளவில்லை. 1,800 வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாய்க்கப்பெற்றிருந்த நாகரீக நாட்டிலே, இவ்வளவு உயர்வு கொண்டிருந்த பெரியோரின் சந்ததியிலே, இவர் கள் நடையிலும் செய்கைகளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியில் நாம் பிறந்திருக்கிருேமென்பது அரிய மகிழ்ச்சி யுண்டாக்கு கிறது. ஆனல், பிரம்ம சந்ததியிலே இராவணன் பிறந்தது போல, இத்தனை பெரிய நாகரீகமும் சிறப்பும் அறவலிமை யும் பொருந்திய மேலோரின் சந்ததியிலே குலத்தைக் கெடுக்கி வந்த கோடாரிக் காம்பாகத் தோன்றி நாம் இக் காலத்திலே இருக்கும் நிலையையெல்லாம் பார்க்கும்போது மனம் புண்ணுய் உலகின்றது. அந் நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத்தன்மையை யும், இந்நாளிலே ஆண்மக்கள் காட்டும் பேடித்தன்மையை யும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'ஆ! நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இத்தனை தாழ்ந்த நிலைக்கு வருவ தைக் காட்டிலும் ஒரேயடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாயிருக்குமே" என்று மனம் குமுறுகின்றது. நமது பத்திரிகை படிக்கும் நேயர்களனைவரும் நாம் "செந்தமிழ்’ப் பத்திரிகையிலிருந்து பெயர்த்துப் பதிப் பிட்டிருக்கும் உபந்யாசத்தைத் தாம் பல முறை படிப்பது மட்டுமே யன்றித் தமது கற்றத்தாருக்கும் மித்திரருக்கும் தமது வீட்டு மாதர்களுக்கும் திரும்பத் திரும்பப் படித்துக் காட்டுதல் நலமென்று கருதுகிருேம்.