பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாரதியார் மக்களுக்காக மக்கள் பேசும் எளிய மொழி யிலே பாடினர்; எழுதினர். எளிமையிலும் வலிமை வாய்ந்த எழுத்து அவருடையது. "சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல்' "வலிமை யற்ற தோளிளுய் போ போ போ மார்பிலே ஒடுங்கிய்ை போ போ போ' இக் கவிதை வரிகள் எத்தனை எளிமையானவை! ஆனல் அதே வேளையில் எத்தனை வலிமையுடையவை! பாரதியாரே எளிய நடையின் தேவையைப் பற்றி எழுதுவதைப் பார்ப்போம், 'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு-இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத் திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோளுகின்ருன்.' இவ்வாறு பாஞ்சாலி சபதம் என்ற நூலின் முகவுரை யிலே பாரதியார் தெளிவாகக் கூறியுள்ளார். இந்த எளிமையும், கவிதைக்குள்ள பொருட்செறிவும் இவருடைய படைப்புக்களிலே எங்கும் ஒளி விடுவதைக் காணலாம். பண்டித உலகுக்கு மட்டும் என்றிருந்த தமிழ் மொழியமுதத்தை பாரதியார் மக்கள் அனைவருக்குமாகப் பகிர்ந்தளித்தார். மக்கள் அந்த அமுதை மாந்திக்கவிகொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கண்களில் சுடர் வீச "நான் தமிழன்; நான் ஒர்