பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I5. ஒப்பற்ற பழம்பெருமை வாய்ந்த தாய்மொழியைப் பேசு கின்றவன்; எனது நாடு இளங்கோவை அளித்த நாடு, திருவள்ளுவரை உலகுக்கே தந்த உயர் நாடு, கம்பன் என்ற மானிடனைப் பாரெல்லாம் கண்டு வியக்கும்படியாகப் பெற்றெடுத்துத் தந்த நாடு, இணையில்லாத நாடு என்று மார்தட்டிப் பேசும் வன்மை உடையவர்கள் ஆனர்கள். பாரதியார் நமது கலைகளின் பெருமையைப் பற்றிப் பேசினர். தமிழைக் குறைத்துப்பேசியவர்களைச் சாடினர். சேமமுறவேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்று தூண்டினர். பாரதியார் தமிழின் பெருமையைப் பாடியதோடு நிற்கவில்லை; தமிழ் நாட்டின் பெருமையைப் பாடியதோடு நிற்கவில்லை. தமிழிலே உள்ள குறைபாடுகளையும் காண் பித்து அவற்றைப் போக்க வேண்டுமென்று அறிவுறுத் தினர். தமிழர்களின் குறைகளை எடுத்துக் காட்டி, இடித்துக் காட்டி, எள்ளி நகையாடி, நையாண்டி செய்து இவ்வாறு பலவழிகளிலும் தமிழர்களைத் தங்கள் சிறுமை களை ஒழித்துக் கட்டிப் பெருமை கொள்ளச் செய்தார். இவற்றில் அவர் தயங்கியதே இல்லை, ஒரு பக்கம் அளவு கடந்து பற்று; மறுபக்கம் தமிழர் களின் நிலைகண்டு கோபக் கனல். விதி வசத்தை நம்பும் தமிழனையும், உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்கத் தவறிவிட்ட தமிழனையும் பாரதி யார் எப்படிச் சாடுகின்ருர் என்று பார்ப்போம்! மழை பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்தி லேயே நிற்கிருரீசுள், ஈரத்திலேயே உட்காருகிறர்கள்