பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 மாத்திரத்திலே ஒருவன் தமிழபிமானி ஆகமாட்டான். பள்ளிக் கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷை யில் கற்றுக் கொடுக்கும் படி முயற்சி செய்கிறவன் தமிழ பிமானி. தமிழராகப் பிறந்தோர் கூடியிருக்கும் சபை களிலேயும், தமிழராகப் பிறந்தோர் ஒருவருக் கொருவர் பேசும் போதும் இதர பாஷைகளில் பேசாமல் தமிழே பேசும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி, தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர் தோன்றும் படி செய்வோன் தமிழபிமானி என்று அழுத்தம் திருத்த மாகக் கூறுகின்ருர். (தெலுங்கு மஹா சபை என்ற கட்டுரை) "உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக் கொண்டு வருகிற தென்பதைத் தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்' என்று அவர் எச்சரிக்கிருர், இவ்விதமாகத் தமிழ் மொழிக்கும் தமிழகத்திற்கும் புதிய உயிர் வரும்படி செய்தவர் பாரதியார். அவருடைய எழுத்துக் களால் தமிழ்க் கவிதை மறுமலர்ச்சி பெற்றது: தமிழ் உரை நடை புதிய வேகமும், வலிமையும் கொண் டதாக மாறிற்று. இந்த மறுமலர்ச்சியும் வலிமையும் பாரதிதாசனர் மூலம் முழுமை பெற்றது என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். முழுமை என்று கூறும் போது மொழி யின் வளர்ச்சி அத்துடன் நின்று விட்டதாக எண்ணக் கூடாது. தமிழ் மறுமலர்ச்சியே முழுமை பெற்றது. ஆனல் தமிழ் இம் மறுமலர்ச்சிப் பாதையில் வளர்ந்து கொண்டே இருக்கும். புதுப்புது அழகுகள், நயங்கள், புதுப்புதுச்