பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தமிழின் நிலை கல்கத்தாவில் 'ஸாஹித்ய பரிஷத் (இலக்கியச் சங்கம்) என்ருெரு சங்கமிருக்கிறது. அதைத் தென்னுட்டி லிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய்ப் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி "ஹிந்து பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிருர். மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படு கிருர். தெலுங்கர், மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந் தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிருர்கள். அவற்ருல் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்களாத்திலுள்ள ஸாஹித்ய பரிஷத்தின் நோக்கமென்ன வென்றல், எல்லா விதமான உயர்தரப் படிப்புக்களும் வங்களாப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரை வில் கொண்டு வந்து விடவேண்டும்' என்பது விரைவா கவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றி விடுவார் கள்' என்பது பல அடையாளங்களினல் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிரு.ர். வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மயிலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ரீ வைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் தெரியாத வைதீக பிராமணராக இரு ந்தும் அதிலே சில இங்கிலீஷ் உபந்நியாஸங்கள் நடந்ததை எடுத்துக்காட்டி மேற்படி