பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 வசனம் தள்ளாடும். சண்டிமாடு போல ஒரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகி லுைம் எழுந்திருக்காது. வசன நடை, கம்பர் க்விதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும். இவற்றுள், ஒழுக்கமாவது தட்டுத்தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசனநடையில் சரியான ஒட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக்கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்.