பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 செய்யத் தலைப்பட்டனர். இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்ருகக் கவனித்தறிந்து கொள்ளுதல் நன்று. அறிவின் வலிமையே வலிமை. அறிவினல் உயர்ந் தோர்களே மற்ருேர் இழிவாக நினைப்பதும், அடிமை களாக நடத்துவதும் ஸாத்யப்பட மாட்டா. அறிவின் மேன்மையால் வெளித் தேசங்களிலே உயர்ந்த கீர்த்தி படைத்து மீள்வாரை அதன் பிறகு இந்தத் தேசத்தார் கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்தி ஸம்பாதித் துக்கொண்டு வருவார்களாயின், அதினின்றும் இங்குள்ள ஸ்திரீகளுக் கெல்லாம் மதிப்பு உயர்ந்து விடும். இந்த விஷயத்தை ஏற்கெனவே நம்முடைய மாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிருர்கள். வங்காளத்துப் பிராமண குலத்தில் பிறந்து ஹைதராபாத் நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் பூரீ மதி ஸ்ரோஜினி நாயுடு என்ற ஸ்திரீ இங்கிலீஷ் பாஷையில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள் மிகவும் போற்றும்படியாக இங்கிலீஷில் கவிதை எழுதுகிரு.ர். இவருடைய காவியங் கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும் உயர்வாகப் பாராட்டப்படுகின்றன. மேலும், இந்த ஸ்திரீ இங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்து முன்னேற்றத்தை யொட்டி அற்புதமான ப்ரஸங் கங்கள் செய்து சிறந்த கீர்த்தி யடைத்திருக்கிரு.ர். மேலும், வங்காளி, பாஷையிலே கவிதை பெழுதுவோராகிய பூரீ மதி காமிநீ ராய், ரீமதி மன குமாரி தேவி, ரீமதி அநங்க மோஹினி தேவி என்ற மூன்று ஸ்திரீகளுடைய பாட்டுக்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அமெரிக்கா விலுள்ள பத்திரிகை யொன்று புகழ்ச்சியுரைகளுடன் சிறிது காலத்துக்கு முன்பு ப்ரசுரம் செய்திருப்பதினின்றும்,