பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 இம்மாதர்களுக்கு அமெரிக்காவில் நல்ல கீர்த்தியேற் பட்டிருப்பதாகத் தெரிகிறது. புன நகரத்துச் சித்திர பண்டிதராகிய ஜனப் பைp ரஹ்மின் என்பவர் அமெரிக்காவின் ராஜதானியாகிய 'நியூயார்க் நகரத்திற்குப் போய் சென்ற வருஷத்தில் அந்நகரத்துச் சிற்பிகளால் மிகவும் போற்றப்பட்டார். இவருடைய சித்திரங்களே அங்குள்ளோர் மிகவும் வியந் தனர். அஜந்தாவிலுள்ன குகைச் சித்திர வேலைகளின் ஆச்சரியத்தைக் குறித்து பூரீமான் பைஜீரஹ்மின் கொலம்பியா ஸர்வகலா சங்கத்தாரின் முன்னே நேர்த்தி யான உபந்யாஸம் புரிந்தார். இவருடன் இவருடைய மனைவியும் அங்கு சென்றிருந்தாள். இவர் இந்தியா தேசத்து ஸங்கீதம்' என இங்கிலீஷில் ஒரு புஸ்தக மெழுதி யிருக்கிருர். ஹிந்து ஸங்கீத சாஸ்திரத்திலும் வாய்ப் பாட்டிலும் நல்ல தேர்ச்சி யுடையவர். இவர் அமெரிக் காவில் பல மாதர் ஸ்பைகளின் முன்பு ஹிந்து ஸங்கீதத் தைக் குறித்துப் பல உபந்யாலங்கள் செய்தார். இடைக் கிடையே தம் உபந்யாலக் கருத்துக்களை திருஷ்டாந்தப் படுத்தும் பொருட்டு நேர்த்தியான பாட்டுக்கள் பாடி அந்நாட்டினரை மிகவும் வியப்புறச் செய்தார். இங்ங்ணம், தமிழ் மாதர்களிலும் பலர் மேல்நாடு களுக்குச் சென்று புகழ் பெற்று மீள்வாராயின், அதி னின்றும் இங்கே நம்முடைய ஸ்திரீகளுக்குள்ள மதிப்பு மிகுதிப்படுமென்பதில் சிறிதேனும் ஐயமில்லை. எவ்வாறு நோக்கிய போதிலும், தமிழ் நாட்டு மாதர் வலம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவராயின் அதற்குக் கல்வித் தோணியே பெருந்துணையாம். எனவே, கொஞ்சம் கொஞ்சம் பல துறைகளில் பயிற்சி வாய்ந்திருக்கும் தமிழ் சகோதரிகள் இரவு பகலாகப் பாடுபட்டு அவ்வத்துறை