பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 பான்மையான பாஷைகள் ஸம்ஸ்க்ருதத்தின் திரிபுகளே யன்றி வேறல்ல. அங்ங்னம் திரிபுகளல்லாததுவும் ஸம்ஸ் க்ருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம். தமிழ் பாஷைக்கோ இலக்கணம் முதன்முதலாக அக்ஸ்தியராலும் அவருடைய சிஷ்யராகிய திரணது மாக்நி (தொல்காப்பியர்) என்ற முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்ட தென்பது மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் ஸம்ஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கின்ற தென்பது மேய்யே. எனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒரு வேளே பின்னிட்டு மறைந்திருக்கக் கூடுமென்று நினைப்பதற்குப் பல ஹேதுக் கள் இருக்கின்றன. இஃது எவ்வாருயினும், ஸம்ஸ்கிருத பாஷையின் கலப்புக்கு முன்னகவே, தமிழ் நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரீகமொன்று நின்று நிலவி வந்த தென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்த தரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படு கின்றன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பிற இடங்களிலும் காணப்படும் நாகரீகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும் பான்மை மூலாதாரமுமாக நிற்பது ஆர்ய நாகரீகம். அதாவது, பழைய ஸம்ஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப் பட்டு விளங்குவது. இந்த ஆரிய நாகரீகத்துக்கு ஸ்மமான பழமை கொண்டது தமிழருடைய நாகரீகம் என்று கருதுவதற்குப் பலவிதமான லாகூடியங்களிருக்கின்றன. 'ஆதியில் பரம சிவனல் படைப்புற்ற மூல பாஷைகள் வட மொழியென்று செல்லப்படும் ஸம்ஸ்கிருதமும் தமிழுமே யாம்' என்று பண்டைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறுமே புராணக் கற்பனை அன்று, தக்க சரித்திர ஆதாரங்களுடையது. "தமிழரும் ஆரியருமல்லாத