பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தென்றலுடன் பிறந்த பாஷை "தமிழ்ப் பாஷையின் இனிமை' என்ற தலைப் பெய ருடன் சென்னை, சுதேசமித்திரன்’ பத்திரிகையிலே இனியதோர் குறிப்பு எழுதபட்டிருக்கின்றது. அதனை மற்ருே.ரிடத்திலே எடுத்துப் பிரசுரித்திருக்கிருேம். தென்ற லுடன் பிறந்த தமிழ் மொழியின் இளமையைப் பற்றி டாக்டர் ஜி. யு. போப் என்னும் புகழ் பெற்ற விற்பன்னர் கொண்டிருக்கும் மதிப்பை அதில் எடுத்துக் காட்டி யிருப்பது தமிழர்கள் அனைவரும் கண்டு மகிழத் தக்க தாக இருக்கின்றது. ஆங்கிலப் பெண்களின் இதழ் நயத் திற்கும், செவி நுட்பத்திற்கும், அபிசிருக்கும் தமிழைப் போன்ற பொருத்தமுடையது வேறெந்த பாஷையும் இல்லையென்று போப் கூறுகிரு.ர். தற்காலத்திலே நம் நாட்டவர்கள் நமது அருமைத் திருமொழியின் சுவையை வளர்க்க முயலாமல் அதன் இன்பமெல்லாம் பாழாக விட்டிருப்பதைப் பற்றி மேற்படி குறிப்பெழுதியவர் மிகுந்த கோபமுணர்த்தி இருக்கின்ருர். நாம் அந்த விஷயங்களில் நமக்கேற்பட்டிருக்கும் அன்புகளைப் பல வாரங்களின் முன்பு ஒரு தடவை விஸ்தாரமாக எழுதி யிருக்கிருேம். பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரைகுறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு மேலிட்டவர்களாகித் தமிழ் மொழியே இறந்து போய்விட வேண்டுமென்று கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிருேம். இவர்கள் கிடக்க, மற்றப்படிப் பொது வாக இந்நாட்டில் ஆங்கிலம் கற்ருே ரெல்லாம் சுபாஷாபி மானம் என்பது மிகவும் குன்றியிருப்பது அன்றி, அதன் நயமறியாது திட்டுவதை நினைக்கும்பொழுது நமக்கு