பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 யும் கவனிக்காமல் பதங்களைச் சூறையாடி மிகவும் விகாரப் படுத்தி விடுகிருர்கள். ஆலுைம், ஆலுைம், ஆலுைம் தமிழ் நாட்டு ஸ்திரீகளின் ஸங்கீதத்தை தாம் புகழாதிருக்க லாகாது. இவர்கள் பாடும் பாட்டிலே பெரும்பான்மைக் கீர்த்தனங்களும், பத்யங்களும் தெலுங்கில் இருந்தபோ திலும், தமிழ்ப்பாட்டுத்தான் அதிகமாகப் பாடுகிரு.ர்கள். இந்தத் தமிழ்ப் பாட்டிலே பல பிழைகள் மலிந்து கிடந்தாலும், ஒரு சில பாட்டுக்கள் மிகவும்.நன்ருக அமைந் திருக்கின்றன. ஒடம் முதலியவற்றில் அதிஸ்மீப காலத் துப்பாட்டுக்கள் மிகவும் விகாரமாயிருந்தாலும், பழைய காலத்துப் பாட்டுகளிலேயே சொல் தயம் அதிகம் இருக் கிறது. பின்னிட்டு "ரயில் வண்டி ஒடம்' முதலிய அசுத்தங் கள் அதிகமாகச் சேர்ந்து விட்டன. இங்கிலீஷ் படித்த புருஷர்கள் கேட்டு மடத்தனமாகச் சந்தோஷட்பட்டதி லிருந்து பெண்களுக்கு இந்தமாதிரி விரலங்களிலே பற்றுதல் உண்டாயிற்று. கும்மிப்பாட்டு, பல்லிப்பாட்டு, கிளிப்பாட்டு, நலங்குப் பாட்டு, பள்ளியறைப்பாட்டு, அம்மானைப்பாட்டு, தாலாட் டுப்பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்னமெட்டு. தமிழர்களின் தாய், அக்காள், தங்கை, காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக் கூடிய இன்பமா? ஞாபகம் இல்லையா? தமிழ்ப் பெண்களின் பட்டைக்கையெடுத்து வணங்கு கிருேம். ஆளுல் அதில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங் கள் பல இருக்கின்றன. தாளஞானம் நமது குடும்ப ஸ்திரிகளின் பாட்டிலே முக்கியமான குறை என்ன வென்ருல் இவர்களிலே பெரும்பாலோருக்குத் தாள ஞானமில்லை.