பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


E ஐரோப்பிய ஸங்கீதம் ஹிந்து ஸங்கீதம் ஐரோப்பிய ஸங்கீதம், ஹிந்து ஸங்கீதம் இரண்டையும் பற்றித் தமது கொள்கைகளை வங்கத்துப் புலவராகிய ரீ ரவீந்திரநாத் தாகூர் தமது சரித்திரக் குறிப்புகளிலே எழுதி யிருக்கிரு.ர். இவர் இளவயதிலேயே பல வருஷம் இங்கிலாந் தில் வாஸம் செய்தவர்; குழந்தை முதலாகவே நல்ல ரஸிகர். இவருடைய வார்த்தைகள் மதிப்புக்குரியன. ரவீந்திரநாதர் சொல்லுகிருர்: "குரலேப் பழக்குவதில் நமது தேசத்துப் பாட்டுக்கார ரைக் காட்டிலும் மேற்கு நாட்டுப் பாடகர் மிகவும் சிறப் புடையோர். அவர்களுக்குத் தொண்டை வசப்பட்டிருப்பது போலே, இங்கு இல்லை. நம்மவர்களிலே உயர்ந்த பாட்டுக் காரர் பாடும்போதுகூட இவர்கள் சிரமப்படுகிருர்கள்’ என்ற விஷயம் வெளியே தெரிந்து விடுகிறது. யாதொரு சிரமமும் காட்டாதபடி மழை பெய்வதுபோலே இயற்கை யாகப் பாடும்படி நம்மவர் சாரீரத்தைப் பழக்கவில்லை. சில சமயங்கவில் மேல் ஸ்தாயியிலும் தமக்கு எட்டாத ஸ்வரங் களைத் தொட முயற்சி செய்கிருர்கள். ஐரோப்பாவில் பாட்டுக்கு வெளியேறுவோரின் தொண்டை, வல்லவன் வாசிக்கும் வாத்தியம்போலே, ஒரு குற்றம், ஒரு அபசப்தம், ஒரு கரகரப்பு. ஒரு பிழை இல்லாமல் இருக்கவேண்டும்.