இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6. இறைவா இறைவா!
பல்லவி
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!-எங்கள் இறைவா! இறைவா! இறைவா! (ஒ-எத்தனை)
சரணங்கள்
1. சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல்லழகுகள் சமைத்தாய். (ஒ-எத்தனை)
2. முக்தியென் ருெருநிலை சமைத்தாய்-அங்கு
முழுதினையு முனரும் உணர் வமைத்தாய்
பக்தியென் ருெருதிலே வகுத்தாய்-எங்கள்
பரமா! பரமா! பரமா! (ஒ.எத்தனை)
7. வெள்ளைத் தாமரை
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒளியில் இருப்பாள்; கொள்ளே யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்! உள்ள தாம்பொருள் தேடி புணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்நின் ருெளிர்வாள்; கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.(வெள்ளைத்)