பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 அந்நாட்டுப் பத்திரிகைகளில் அங்கீகாரம் செய்துகொண்டு மிகவும் அழகாக நன்றி வார்த்தைகள் சொல்லியிருக் கிரு.ர்கள். டோக்யோ ஸாம்ராஜ்ய கலா சங்கத்தில் பாரத கவி ரவீந்திரர் செய்த ஆச்சரியமான பிரசங்கத்திலே அவர் சொன்னதாவது :- "முதலாவது, உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். ஆசியாக் கண்டத்தில் பிறந்த எல்லா ஜனங்களும் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடன்பட்டிருக் கிருேம். எல்லா பந்தங்களைக் காட்டிலும் இழிவான பந்தம் உள்ளச் சோர்வு. இதனுல் கட்டுண்டவர் தந்நம்பிக்கை யில்லாதவர். கேட்டீர்களா, சிலர் சொல்லுவதை:"ஆசியாக் கண்டம் பழமையிருளில் மூழ்கிக் கிடக்கிறது: அதன் முகம் பின்னே முதுகுப் புறமாகத் திருப்பி வைக்கப் பட்டிருக்கிறது என்று. இப்படி வார்த்தை சொல்வோரின் பேச்சை நாமும் நம்பிளுேம். சிலர் இதையே ஒரு தற்புகழ்ச்சி யாக்கி அப்படித்தான்; நாங்கள் பழ மையிலேதானிருப்போம். அ. து தா ன் எங்களுக்குப் பெருமை’ என்ருர்கள். 'விஷயங்கள் இந்த ஸ்திதியில் இருக்கும் பொழுது நாமெல்லாம் ஒரு மோஹ நித்திரையில் வீழ்ந்திருந்த காலத்திலே, ஜப்பான் தனது கனவு நிலைமை நீங்கி எழுந்தது; நடக்கத் தொடங்கிற்று; பூதாகாரமான அடியெடுத்து வைத்தது; நிகழ் காலத்தை அதன் முடியிலே போய்ப்பற்றிக்கொண்டது. எல்லோரும் தட்டி யெழுப்புண் டோம். பூமியின் மேலே, சில எல்லைக்குள்ளிருக்கும் சில தேசத்தாருக்கு மாத்திரம் முன்னேற்றம் வசப்படாது என்ற மாயை போய்விட்டது. ஆசியாக் கண்டத்தில் பெரிய ராஜ்யங்கள் ஸ்தாபனம் செய்திருக்கிருேம். பெரிய சாஸ்திரம் கலை, காரியம்-எல்லாம் இங்கே தழைத்தன