114 படலாம். பூர்வ காலத்தில் பலவகைக் கணித சாஸ்திரங் களும் இயற்கை நூல்களும் பாரத நாட்டிலேதான் பிறந்த பின்பு உலகத்தில் பரவியிருப்பதாகச் சரித்திர ஆராய்ச்சி யிலே தெரிகிறது. இப்போது 'ஸயின்ஸ் பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்று வருகிருேம்; காலத் கிரமத்தில் தலைமை பெறுவோம். இனிமேல், கதையைச் சுருக்கிவிட வேண்டும்; வருங் காலத்தில் உலகத்துக்கு பாரத தேசம் என்ன பாடம் கற்பிக்கும்? எதல்ை இந்நாடு லோக குரு ஆகும்? உலகத் திற்கு நாம் கற்றுக் கொடுக்கப்போவது கர்மயோகம். கடமையைச் செய்து, தவருதபடி செய்து இன்பத் தோடிருக்க வழி. எப்படி? யோகமே வழி. "யோகமாவது செய்கைத்திறமை' என்று ப க வான் கீதையிலே சொல்லுகிருர். பூமண்டலத்துக்கு யோகம் நாட்டுவோம். சென்னைக் கிருஸ்துவ கலாசாலையில் டாக்டர் மில்லர் என்ருெரு பாதிரியிருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும் போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்றெல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளி வாகக் காட்டியிருக்கிருர்களென்று சொல்லியிருக்கிரு.ர். சாதாரணப் பாதிரி. கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்து கொண்டார். கடவுள் சர்வாந்தர்யாமி என்பது எல்லா மதங்களிலுமுண்டு. ஆனல் இங்கேதான் அதைத் தெளிவாகச் சொல்லுகிருேம். பிற மதங்களில் தெளிவில்லை. அந்தர்யாமி- உள்ளே செல்வோன். உள்ளே நிற்போன், உள்ளே செல்வோன்’ என்பது தாதுப் பொருள். உள்ளே நிற்போன்’ என்பது வழக்கப் பொருள்.
பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/118
Appearance