பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அதன் வருஷாந்திர இறக்குமதிகளைக்காட்டிலும், ஏற்று மதிகள் அதிகப்பட்டு, இங்கிலாந்தின் நன்மைகளின் பொருட்டு அது பெரும் நஷ்டமடைந்து வருவதையே, மார்லி இந்தியாவிலேயே செல்வம் குவிந்து வருவதற்கு திருஷ்டாந்தமாகக் கூறுகிரு.ர். 'விவசாய ஜாதியாருக்குப் பெரிய அனுகூலம் செய்து விட்டதாக' மார்லி பெருமை பாராட்டிக் கொள்ளு கின்ருர். 11 பென்ஸ் கொண்ட 1 ரூபாயை வில்லிங் 4 பென்ஸ் கொண்டதாக வைத்துக்கொள்ள வேண்டு மென்று கவர்ன்மெண்டார் தமது சொந்த நலத்தின் பொருட்டு விதியேற்படுத்தி 100க்கு 40 ஆக இருந்த தீர்வையை 100க்கு 50 ஆகச் செய்துவிட்டார்கள். இது விவசாயிகளுக்குச் செய்த அனுகூலம். இனி, இத்தேச வஸ்துக்களை இழுத்துக் கொண்டு, அன்னியர்கள் காலில் போட்டு வரும் ரெயில் பாதைகளை அன்னிய கம்பெனியார் முதல் போட்டு நடத்துகிரு.ர். இந்தியாவிலேயே எந்த வருஷம் பஞ்சம் அதிகமோ அந்த வருஷத்திலே டிெ கம்பெனி பங்காளிகளுக்கு அதிகப் பணம் கிடைக்கிறது. இது நமக்குப் பெரிய வரமாக அவர்கள் வெளியில் பேசிக் கொள்கிருர்கள். நீர்ப்பாய்ச்சல் விஷயத்தில் ஏதோ ஒரு பெரிய உதாரத் தன்மை காட்டிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிருர்கள். 250 வருஷங்களிலே இந்தியாவின் நீர்ப்பாய்ச்சலின் பொருட்டு 28, 000, 000 பவுன் செல விட்டிருக்கிருர்கள். அதில் பெருந்தொகை உபயோக மில்லாமல் துர்விநியோகமாயிருக்கிறது. இத்தனையும் சேர்த்து ஒரே வருஷத்தில் இங்கிருந்து வாரிச்செல்லும் பணத்துக்கு சமானமாகமாட்டாது. புராதனமான அரிய வாய்க்கால் தொழில்களை சரியானபடி செப்பனிடாமல் பாழாக்கிவிட்டார்கள்.