பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I25 இனி உப்பு வரி ஒன்றிருக்கிறது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உப்புக் கிடைக்காதபடி நஷ்ட மடைந்து கொண்டிருந்த சமயத்தில், வரியின் பளு. மிகுதியாலேயே கவர்ன்மெண்டாருக்குத் தக்க வருமானம் கிடைக்க வழியில்லாமலிருந்தது, இந்த சமயத்தில் டிெ வரியை சிறிது குறைத்துவிட்டார்கள். உப்பைப் போன்ற பிரானதாரமான வஸ்துவில் வரி விதிப்பதுவே பெரும் பாதகம். அப்படியிருக்க, ஒருவித சுயநலத்தைக் கருதி உப்பைக் குறைத்துவிட்டது ஒரு தர்மமாகுமா?............ S S S S S S S S C C C C S S S S S S S S S S S S தர்மம் என்று சொல்லிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படியேதான் இதுவும் இருக்கிறது. இவற்றையெல்லாம் நமது rேமாபிவிருத்தியின் நிதர்சனங்களென்று மார்லி வெட்கமில்லாமல் சொல்ல வந்துவிட்டார். நமக்கு இதன் அக்கிரமம் எவ்வளவு தெளிவாக விளங்குகிறதோ அவ்வளவு தெளிவாக மார் லிக்கும் விளங்கு மென்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனல் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்தியா மந்திரி வேலை பார்ப் பவர் அதற்குத் தக்கபடி பேசவேண்டாமா? நாய் வேஷம் போட்டால் குலைத்துத்தானே தீரவேண்டும்? இந்தியாவின் விஷயமாக........................ பேசிக்கொண்டு வந்த மார்லிக்கு அவர் பேசும் போது தொண்டையடைத்து மூச்சுமூட்டிப் போய்விடவில்லையே! என்ன ஆச்சரியம்! என்று ஹைண்ட்மான் கவலைப்படுகிரு.ர். நன்றி-பாரதி தரிசனம்-முதற்பாகம்.