பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 'எல்லாவிதமான அன்னியாதிபத்தியங்களைக் காட் டிலும் ஒரு தேசத்தார் மற்ருெரு தேசத்தார் மீது செலுத்தும் அன்னியாதிபத்தியம் மிகக்கொடியது என்று மக்காலே சொன்னர். இது மக்காலே காலத்தில் எத்தனை உண்மையோ, அத்தனை இக்காலத்திலும் உண்மையே. அவர் வார்த்தை மற்ற தேசங்களுக்கு எவ்வள்வு பொருந்துமோ அத்தனை இந்தியாவுக்கும் பொருந்தும். அன்னிய நுகத்தடியின் கஷ்டத்தை இந்தியா உணர்கின்ற தென்பதை மறுத்தல் மூல ஸத்யங்களைப் பார்க்க மாட்டோமென்று கண்ணை மூடிக் கொள்வதேயாகும். இந்தியாவில் ப்ரிட்டிஷ் ராஜ்யத்தை ஆதரித்துப் பேசுவோர் இந்நாட்டிற்கு ப்ரிட்டிஷார் பரோபகாரசிந்தனை கொண்டுமட்டும் வந்ததாகச் சொல்லுகிருர்கள். இந்நாட்டு ஜனங்கள் தமக்குத் தாமே தீங்கு செய்து கொள்ளாமல் காக்கும் பொருட்டாகவும், நம்மவரின் தர்ம நியாயத்தை உயர்த்தும் பொருட்டாகவும் லெளகிகச் செல்வம் ஏற் படுத்திக் கொடுக்கும் பொருட்டாகவும், இது போன்ற பல காரணங்களின் பொருட்டாகவும் அவர்கள் இங்கு வந்ததாகச் சொல்லப் படுகிறது. இவையெல்லாம் பகrபாதிகள் வழக்கமாகச் சொல்லும் அரைமொழிச் சொற்களேயாம்.'உண்மை யாதெனிலோ, ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுத்தப் பட்டது, இந்தியாவின் நன்மைக் காக அன்று. இந்தியாவினின்றும் பணத்தை ஏராளமாய்த் திரட்டிக் கொண்டு போய் ப்ரித்தானியாவுக்கு நன்மை செய்யும் பொருட்டாக ஏற்பட்டது. பொன்னசையுடன் மண்ணுசையும் கலந்தது. பிறகு கம்பெனியாரிடமிருந்து அரச மகுடத்தின் கீழே கொண்டுவரப் பட்டபின் பொருளாசையும் அதிகார ஆவலும் ஆட்சி செய்வோருக் குக் குறைவுபடவில்லை. பேதம் யாதெனில், யதேச்சாதி காரத்தை இப்பொழுது ஒழுங்குப்படி நடத்துகிருர்கள்.