154 வந்து நிற்கிருர். ஏனெனில் தேசீயப் பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகளுக்கு முஸ்லிம் மத நூல்களே உப தேசிக்கப்படு மென்பது ஸ்கலருக்கும் தெரிந்த விஷயம். 62. ஐர்லாந்தும் இந்தியாவும் 19 ෆ්රෂ්ඨිකා 1927 மஹாயுத்தம் நடக்கும் காலத்தில், எடிஸன் என்ற அமெரிக்க மின்ஸார சாஸ்திரியின் விலையுயர்ந்த ஆராய்ச்சிக் கூடமொன்று தீப்பட்டெரிந்து போயிற்று. அதுபற்றிச் சில நண்பர்கள் அவரிடம் துக்க விசாரணை புரிந்து கடிதமெழுதியிருந்தார்கள். அதற்கவர் சொன்னர்: "என் கஷ்டம் ஒரு கஷ்டமா!அதோ! ஜெர்மனியில் கைஸர் சக்கரவர்த்தி இருக்கிருர், பாருங்கள். அவர் ஒரு வரையும், அவருடைய பலமற்ற துணைவர் ஒரிருவரையும் எத்தனையோ அரசுகள் கூடி எத்தனையோ வகைகளாகப் போர் புரிகின்றன. அந்த ஒரு மனிதர் என்ன செய்வார், பாவம் எனவே எனக்கு ஏதேனும் ஸங்கடம் நேரும் போதெல்லாம் நான் நம்மைக்காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிக பயங்கரமான விபத்துக்களாலே சூழப் பட்டிருக்கும் கைஸரை நினைத்து மனந்தேறுகிறேன்' என்ருராம். அக் காலத்தில் இக் கதை, வெளியிடப்பட்டிருந்தது தொடர்ச்சியாகப் பத்திரிகை படித்துவரும் நண்பர்களிலே பலருக்கும் ஞாபகமிருக்கலாம். அதுபோல் இந்தக் காலத் தில் நாம் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜைச் சூழ்ந்திருக்கும் ஸங்கடங்களின் தொகையையும் அளவையும் கருதி நம்முடைய கஷ்டங்களே மறக்க முடியுமென்று தோன்று கிறது.
பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/158
Appearance