பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இருப்பதன் உண்மையை நன்குணர்ந்த ரீமான் தெவலேரா, தாம் தமது குடியரசுக் சொள்கையை விட்டு "ஸ்மட்ஸ் ஸ்வராஜ்யத்தை அங்கீகரிக்க ஆயத்தமாக இருப்பதாகவும். ஆனல் அல்ஸ்டர் தனது தனிப் பார்லி மெண்டை விட்டுவிட வேண்டுமென்றும் வற்புறுத்தினர். இங்ங்ணமிருக்க, முன்பு யூனியனிஸ்ட் தலைவராக இருந்து இங்கிலீஷ் கவர்ன்மெண் டினிடமுள்ள அளவிறந்த பக்தி யால் அதனை எதிர்த்துப் போர் செய்யப் படைகள் தயார் செய்தவராகிய ஸ்ர் எட்வர்ட் கார்ஸனுடைய பட்டத்தில் இப்போதிருக்கும் அல்ஸ்டர் ப்ரதம மந்திரியான ஜேம்ஸ் க்ரேக் லண்டன் சமாதான ஸங்கத்திற்குத் தம்மை ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் அழைத்திருப்பதைக் குறித்துப் பேசிய உதாளiன மொழிகளை ராய்ட்டர் தந்திகளிடையே காணலாம். இங்கிலாந்திலும் லார்ட் டெர்பி முதலியவர்கள் மிஸ்டர் ஜ்யார்ஜைக் கடலில் கவிழ்த்து விடுவதற்குரிய யோசனைகள் இப்போது தீவிரமாகப் புரிவதன் காரணம் ஐர்லாந்துக்கு அவர் ஸ்வராஜ்யங் கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தாலே யன்றிப் பிறிதில்லை. கான்ஸர்வடிவ் ககதியார் கைவிட்டால் பிறகு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக்கு பஸிபிக் சமுத்திரந்தான் கதி. இங்ங்னம் ஐர்லாந்து விஷயத்தில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் இருதலைக் கொள்ளி எறும்பு போல இடர்ப்படுதல் ஒருபுறமிருக்க இந்த சமயத்தில் இந்தியராகிய நாமும் அவ்ரிடம் ஒரு செய்தியை மிக நன்கு வற்புறுத்திக் கூற விரும்புகிருேம். அதாவது ஐர்லாந்தைச் சென்ற பல நூற்ருண்டு காளாக மீட்டும் மீட்டும் போரில் அடக்கி, அதன் விடுதலை வேட்கையை மறுத்து வந்தீர்கள். ஐர்லாந்து மிகச்சிறிய