பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I65 காலையிலே, அவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வது போலச் செய்கிருன், நல்ல கெட்டிக்காரன். அவன் சொன்னன்: "குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது, சொல்லடி, சொல்லடி, சக்தி மாகாளி, வேத புரத்தாருக்கு நல்ல குறிசொல்லு: தரித்திரம் போகுது, செல்வம் வருகுது; படிப்பு வளருது, பாவம் தொலையுது: படிச்சவன் சூதும் பாவமும் பண்ணில்ை போவான், போவான்; ஐயோவென்று போவான், வேத புரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்; சாத்திரம் வளருது; சூத்திரங் தெரியுது; மந்திரம் பெருகுது; தந்திரம் வளருது; மந்திர மெல்லாம் வளருது; வளருது குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு, சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதி. அந்தரி, வீரி, சண்டிகை, சூலி; குடுகுடு குடுகுடு" இப்படி அவன் சொல்லிக் கொண்டு போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன், இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சரியத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றன். கீழே இறங்கிப்போய், அவனை ஸமீபத்தில் அழைத்து 'எந்த ஊர்?" என்று கேட்டேன். "சாமி, குடுகுடுக்காரனுக்கு ஊரேது. நாடேது? எங்கேயோ’ பிறந்தேன். எங்கேயோ வளர்ந்தேன்.