பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இளைஞர்களே, வருங்காலப் பாரதத்தை உருவாக்கும் பொறுப்புள்ள இளைய சமுதாயமே-நன்கு சிந்தித்துப் பாருங்கள். பாரதியார் தமது காலத்து மக்கள், தாம் எதிர்பார்த் ததுபோல முன்வரவில்லையே என்று கவலைப்ப்ட்டதுண்டு. அந்தக் கவலேயினல் தமக்கே இந்த நாட்டை ஒரு புதிய விழிப்புக் கொள்ளும்படி செய்யக்கூடிய வல்லமையை அருளுமாறு வரங் கேட்கிரு.ர். 'விண்ணும் மண்ணும் தனியாளும்-எங்கள் வீரை சக்தி கிணதருளே’ என்று தொடங்கும் பாடலில் தமது இஷ்ட தெய்வ மாகிய பராசக்தியிடம் வரங் கேட்கிருர். அவர் வரம் கேட்கும் விதமே தனி; கெஞ்சவில்லை. "தாராய் எனில் உயிரைத் தீராய்' என்றுதான் கேட்கிரு.ர். கல்லை வயிரமணி ஆக்கல்-செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும் புல்லை நெல்லெனப் புரிதல்-பன்றிப் போத்தைச் சிங்க ஏருக்கல்" இவ்வாறெல்லாம் செய்து 'இந்த நாட்டோர் கீர்த்தி யெங்கும் ஓங்க'ச் செய்யவேண்டும் என்றுதான் காளி தேவியைப் பார்த்துக் கேட்கிரு.ர். பாரதியாருடைய நண்பரும், இவருடைய கொள்கை களை ஏற்றுக்கொள்ளுபவருமான குவளை கிருஷ்ணமா சாரியார் ஒரு சமயம், 'ஜனங்களில் பலர் நாம் தப்பிதமான கொள்கைகளை வைத்திருப்பதாகச் சொல்லுகிருர்களே, அதற்கென்ன சொல்லுகிறீர்கள்?' என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார் “நாம் இன்னும் நானுாறு வருஷங்