பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்: அதனிலுந் திறன்பெரி துடைத்தாம் அருங்கலை வாணர், மெய்த்தொண்டர் தங்கள் அறவழி யென்று நீ அறிந்தாய்; நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை நெறியினல் இந்தியா விற்கு வருங்க்தி கண்டு பகைத்தொழில் மறந்து வையகம் வாழ்கநல் லறத்தே! 5 31. வாழிய செந்தமிழ்! (ஆசிரியப்பா) வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக! அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! வந்தே மாதரம் வந்தே மர்தரம்! 32. சுதந்திரப் பெருமை ("தில்லை வெளியிலே கலந்துவிட் டிசலவர் திரும்பியும் வருவாரோ?' என்னும் வர்ண மெட்டு) வீர சுதந்திரம் வேண்டிநின்ருர் பின்னர் வேருென்று கொள்வாரோ?-என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ? (வீர)