பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 முள்ளும் போன்ற பாதை நம் கவிகளுக்கு நல்ல பாதை யாகத் தோன்றலாயிற்று. கவிராயர் "கண்" என்பதைச் "சக்கு என்று சொல்லத்தொடங்கினர். ரஸ்ம் குறைந்தது; சக்கை அதிகப்பட்டது. உண்மை குறைந்தது. பின்னல் திறமைகள் அதிகப்பட்டன. "சவியுறத் தெளிந்து தண்ணென் ருெழுக்கமும் தழுவிச் சான்ருேர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார்: என்று கம்பன் பாடியிருக்கிருன். சவி' என்பது ஒளி: இது வடசொல்; கம்பன் காலத்தில் அதிக வழக்கத்திலிருந்தது போலும். "ஒளி பொருந்தும்படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த) நடையுடையதாகி, மேலோர் கவிதையைப் போலக் கிடந்தது கோதாவரி நதி' என்று கம்பன் வர்ணனை செய்கிருன். எனவே, கவிதைகளில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்கவேண்டுமென்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை. மேலும், நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள் அக்காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற, பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களேயே வழங்கவேண்டும். அருமை யான உள்ளக்காட்சிகளை எளிமைகொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனல் சென்ற சில நூற்ருண்டு களாக, புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகு ஸ்ாதாரண விஷயங்களே அஸாதரான அலெளகிக அந்தகார நடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானஞ் செய்துகொண்டார்கள். Lanr. tJtr.--6