பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இடைக்காலத்து சங்கீதம் பாரத தேசத்து ஸங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து ஸங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப் போலவே ஸங்கீதத்திலும் நவரஸங்களின் தொழில் இருக்கவேண்டும், நவரஸங்களைப்பற்றி இந்தப் பத்திரிகையிலே (சுதேசமித்திரனில்) தனியாக ஒரு வியாஸம் பின் எழுதப்படும். இன்ன இன்ன ராகங்களிலே இன்ன இன்ன சமயங்களில் இன்ன இன்ன ரஸங்கள் தோன்றப் பாடவேண்டுமென்ற விதிகள் எல்லா பூர்வ காலத்து நூல்களிலே காணப்படுகின்றன. கீர்த்தனத் திலுள்ள சொற்களின் அர்த்தமும் ராகத்தின் ஒளியும் ரஸத்திலே ஒன்றுபட்டிருக்க வேண்டும். தியாகையர் காலம்வரை நமது தேசத்து ஸங்கீதம் ஒளியுடன் இருந்தது. பிறகு இதிலும் இருள் சேரத் தொடங்கிவிட்டது. பாட்டிலே ரஸச் சேர்க்கை கிடையாது. அப்படியே சேர்த் தாலும் சோக ரஸம் (கருணுரலம்) தான் சேர்ப்பார்கள். மற்றவை மடிந்து போயின. பாட்டுக்கு இசைந்தபடி தாளம் என்பது மாறிப் போய்த் தாளத்துக் கிசைந்தபடி பாட்டாகிவிட்டது. 'இன்பத்தைக் காட்டிலும் கணக்கே பிரதானம் என்று முடிவு செய்து கொண்டார்கள். இன்பமும் கணக்கும் சேர்ந்திருக்க வேண்டும். இன்பமில் லாமல் கணக்கு மாத்திரம் இருந்தால் அது பாட்டாகாது. மறு பிறப்பு இடைக் காலத்தே நமக்கு நேர்ந்த கேட்டிற்கு ஸங்கீதத்தையும் க வி ைத ைய யு ம் திருஷ்டாந்தங் காட்டினேம். ஆனால், இந்தக் கேடு அதை இரண்டை யும் மாத்திரமே தொட்டு நிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம், நமது ஜனக்கட்சி, ஜன நீதி, நமது