பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ெJrதவுடைமையைப் பற்றிப் பாட வந்த இடத்தில் கீதைக்

கூற்றை? ஏட்டுக் கருத்தாக இல்லாமல், நாட்டின் நடை முறையாகக் கா! ணவேண்டும் என்று குறிப்பாக உணர்த்து கிறான் அவன். இதே கருத்தை உலகில் வறுமையை ஒழிப்பு பதற்குச் செய்ய வேண்டிய காரியங்களை நினைவூட்டி, மனிதனை மனிதன் சுரண்டும் இழிநிலையைச் சுட்டிக்காட்டி, அவன் எழுதியுள்ள *ஜன வகுப்பு' என்ற கட்டுரையில் {கட்டுரைகள்-தத்துவம்) எடுத்த எடுப்பிலேயே பின் வருமாறு சொல்கிறேன்: • *மனுஷ்யன் பாபத்தை விட்டால் அரைத் தன்மை அடையலாம். - அமரநிலை பற்றிய கருத்தைப்போலவே கிருதயுகம் பற்றிய கருத்தையும் அவன் இந்திய நாட்டின் நம்பிக்கை களையும் பண்பாட்டையும் ஒட்டியே உருவாக்கிக் கொள் கிறான். இந்திய நாட்டுப் புராணங்களும், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் சக்கரவட்டமாகச் சுழலும் நான்கு யுகங்களைப் பற்றிப் பேசுகின்றன. இவற்றில் கலியுகம் என்பது மகாபாரத யுத்த முடிவோடு தொடங்கிற்றென்றும், இந்த யுகத்தில் பொய்யும், சூதும், புன்மையும் நிறைந் திருக்குமென்றும், இந்த யுகத்தின் ஆயுட்காலம் 43,20,000 ஆண்டுகள் என்றும், இந்தக் காலம் முடியும் பருவத்தில் மீண்டும் சத்ய யுகம், அதாவது கிருதயுகம் தோன்று மென்றும் அவை கூறுகின்றன. இந்த 43 லட்சமும் சொச்ச (மும் கொண்ட கலியுகத்தில், பஞ்சாங்கக் கணக்குப்படி இது வரையில் சுமார் 5,000 ஆண்டுகள்தான் கழிந்துள்ளன. எனவே அந்தக் கணக்குப்படி கிருதயுகம் தோன்ற இன்னும் 43 லட்சமும் சொச்சமுமான ஆண்டுகள் கழிய வேண்டும்! இவ்வாறிருந்த போதிலும், இந்த உலகத்தில் கிருதயுகம்-டி அதாவது சத்தியமும் நேர்மையும் கோலோச்சும் சத்ய யுகம்-- விரைவில் தோன்ற வேண்டுமென்றே ஞானிகளும் தத்துவாசிரி யர்களும் வேட்கை கொண்டு வந்திருக்கிறார்கள், உதாரண மாக, ஆழ்வாராதியர்களில் சிறந்த தத்துவ ஞானியாக மதிக்கப்படுபவரான நம்மாழ்வார் '* • திருவாய்மொழி' 'யில் பின்வருமாறு பாடுகின்றார்: 118