பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலியும் இது இங்கு காண்மின். பொலிக ! பொலிக ! பொலிக ! போயிற்று வல்லுயிர்ச் சாபம்; நலியும் நரகமும் நைந்த; நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை; கலியும் கெடும் ; கண்டு கொண்மின்,....., (திவ்யப் பிரபந்தம் 3352) திரியும் கலியுகம் நீங்கி - தேவர்கள் தாமும் போந்து பெரிய இதயகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெருக சூரிய முகில் வண்ணன் , எப்மோன் கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் இரியப் புகுந்து , இசை பாடி எங்கும் இடம் கொண்டாவே. (திவ்யப். 3354) தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன; தொண்டீர்! ஒக்கத் தொழுகிற் சீராகில் - கலியுகம் ஒன்றும் இல்லையே! (திவ்யப். 3361) - பாரதி இத்தகைய பாடல்களிலிருந்தும், புராண நம்பிக் கைகளிலிருந்தும் கிருதயுகக் கருத்தைச் - சுவீகரித்துக் கொண்டான். நம்மாழ்வாரின் (3361-ம்) பாடலை அவனே தனது கட்டுரையொன்றில் மேற்கோள் காட்டுகிறான் (யாரைத் தொழுவது? (கட்டுரைகள் :தத்துவம்). இவ்வாறு, பெற்ற கருத்தைப் பாரதி தனது இலக்கிய வாழ்வின் ஆரம்ப காலத்திலிருந்தே பயன்படுத்தத் தொடங்கி விட்டான் என்றே சொல்ல வேண்டும். விவேகாநந்தரின் இளைய சகோதரரும், வங்காள நாட்டின் சிறந்த தேசபக்தருமான பூபேந்திர நாத தத்தர் 1907-ம் ஆண்டில் ராஜத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றார். அவ்வாறு அவர் சிறைத் தண்டனை பெற்ற