பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்றாண்டின் தொடக்கத்தில் ஷெல்லி கண்ட டொற்காலக் கனவை, அவனுக்கு நூறாண்டுக்காலம் இளையவனான பாரதி, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலிக்கத் தொடங்கி விட்ட நனவாகக் காண்பதைக் காண்கிறோம். " ஷெல்லியின் பொற்காலக் கனலிலிருந்து பெற்ற தனது கிருதயுக லட்சியத்தை இந்தியப் பண்பாட்டோடு இணைத்து உருவாக்கிக் கொள்கிறான் பாரதி. எனினும் ஷெல்லியைப் டோல் பாரதி தனது கிருத யுக சமுதாயத்தைப் பற்றி நீண்ட தொரு சித்திரத்தைப் படைக்கவில்லை. அவ்வாறு பார்த் தால், 'பாஞ்சாலி சபத' த்தில் விதுரனின் வாய்மொழியாகத் தர்ம ராஜ்யத்தைப் பற்றிக் கூறும் பாடல்களைத்தான் (பாடல்கள் 11 6-113) கிருதயுக சகாப்தத்தை அனுசரித்த ஒரு சித்திரம் எனச் சொல்லவேண்டும். மற்றப்படி, பாரதி தனது கிருத யுக லட்சியத்தைத் தனது படைப்புக்களில் பரவலாக விரவித்தான் கூறியுள்ளான் எனச் சொல்லலாம், ஷெல்லியைப் போலவே பாரதியும் இந்த உலகத்தையே சொர்க்கமாக, வானகமாகக் காணவேண்டும் எனக் கருதுகிறான்; பரிபூரணத்துவத்தின் மூலம் அமர நிலை எய்தும் ஷெல்லியின் மனிதனைப் போலவே, பார தியும் இந்தியத் தத்துவக் கருத்துக்களின் ஆதரவோடு மனிதனுக்கு அமர நிலை உண்டு என்று உறுதி கூறுகிறான். மேலும் ஷெல்லியின் “ராணி மாப்' சித்திரிக்கும் பொற்காலத்தில் சாணப்படும் வேறு சில கருத்துக்களிலும் பாரதி உடன்பாடு கொள்கிறான். உதாரணமாக, ஐ..லகத்தில் வறுமையை ஒழிப்பது முற்றிலும் சாத்தியம் என்பதையும், பூமாதேஷ் வற்றாத செல்வ வளத்தை வழங்கும் சக்தி பெற்றவள் என்பதையும் பாரதி அங்கீகரிக்கிறான்; மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகாரம் பூமாதேவி கொடுக்கும்" என்று தன' து ' ஜன வகுப்பு' என்ற கட்டுரையில் (கட்டுரை: தத்துவம்) உறுதி கூறுகின்ற பாரதி இதே கருத்தை, மரத்தை நட்டவன் தண்ணீர்-நன்கு வார்த்ததை ஓங்கிடச் செய்வான்; சிரத்தை உடையது. தெய்வம்-இங்கு சேர்ந்த உணவல்லை யில்லை. 1 2 5