பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இஸ்லாமின் புரட்சியில் வரும் சித்னா மனிதகுலத்தின் விடுதலையைப் பற்றிப் பேசும்போது பின்வருமாறு கூறுகிறாள்:

  • 'தமது பொதுவான அடிமைத்தனத்தை உடைத்து

நொறுக்கி 3.5 ஆணும் பெண்ணும், எட்டவரம்பற்ற காதலின் மூலம், தமது துயரத்துக்கு மாற்றான ஓர் ஆறுதலைத் தாராளமாகப் பெறலாம். (சருக்கம் 4, பாடல் 51 {4 ) }: {. , , Mian and woman Their common bondage burst, may freely borrow -rora tawless love a solace for their sOrrow...) ஆம். சட்டதிட்டங்களைக் கடந்த காதல் வாழ்வும் விடுதலை வாழ்க்கையின் ஓர் அம்சமாக ஷெல்லிக்குத் தோன்று கிறது. விடுதலைக் காதல் பற்றிய ஷெல்லியின் கருத்தை நாம் அவன் எழுதிய " எபிசைக்கிடியாள்' (Epipsychiction) என்ற அற்புதமான கவிதையில் தெளிவாகக் காணலாம். இந்தக் கவிதையே ஒரு காதல் கவிதைதான். இது பிறந்த விதமும் சுவாரசியமானது. ஷெல்லி இத்தாலியில் இருந்த காலத்தில் எமிலியா (Emilia) என்ற பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவளது தந்னத. தம்மைக் காட்டி,லும் ' மிகவும் இளையவளான ஒரு பெண்ணை மறுமணம் புரிந்து கொண்டார், எமிலியாவும் அவளது சகோதரியும் நல்ல அழகிகள். இதனால் பொறாமை கொண்ட அந்தச் சிற்றன்னை அவர்கள் இருவரையும் பைசர் நகரத்துக்கனுப்பி, இருவரை யும் வெவ்வேறு கன்னியாஸ்திரீப் பள்ளிகளில் சேர்க்க வழி செய்து விட்டாள். இவ்வாறு கன்னியாஸ் திரீப் பள்ளிக்குச் சென்று, அங்கு கிட்டத்தட்ட சிறை வாசத்தையே அனு பவித்துவந்த பத்தொன்பது வயதுக் குமரியும் அழகியுமான எமிலியாவைப் பற்றிக் கேள்விப்பட்டதும், கருணையுள்ளம் பனடத்த ஷெல்லி அவளைக் காணச் சென்றான். ஆனால் அந்த அழகியைக் கண்டதும் ஷெல்லிக்குத் தனது பெண்மை லட்சியத்தையே காண்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு, அதன் விளைவாக அவள்மீது ஆத்மார்த்தமான காதலும் தோன்றிவிட்டது. ஆனால் ஷெல்லி தனது காதலை அவளுக்கு உணர்த்தி முடில தற்குள் எமிலியாவுக்கு அவளது தந்தை 149