பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் செய்யும் மனைவியே சக்தி, கண்டீர்! கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும், (பாரதி அறுபத்தாறு-1. Nாடல் 50) இதே கருத்தை அவன் தான் எழுதிய 'ஜகச் சித்திரம்' என்ற நாடகத்திலும், தேவதத்தன் என்ற இளைஞனின் கூற்றுகப் பின்வருமாறு வெளியிடுகிறான்; நானே கடவுள் கடவுளே நான். காதலின்பத்தால் கடவுள் நிலைபெற்றேன்! (ஐந்தாம் காட்சி). மேலும் காதலினால் பெறும் அமர நிலை குறித்து , அவன் தனது 'சந்திரிகையின் கதை' என்ற வசனப் படைப்பில். பின்வருமாறு கூறுகிறான்: “உண்மையான காதல் ஜீவன் முக்திக்குப் பெரிய சாதனமாகும். உண்மையான காதலின் பர்ாதை மிகவும் கரடு முரடானது ' என்று ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கிலக் கவியரசர் சொல்லுகிறார். அந்தக் கரடு முரடான பாதையிலே ஒருவன் சிறிது தூரம் மனத் தளர்ச்சியில் லாமலும், பாவ நெறியில் நழுவிச் செல்வா மலும், உண்மையுடன் செல்வானாயின், இன்பத்தைச் சுத்த நிலையில் எய்தலாம்....... இன்பமயமான இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும், காத லின்பமே சாலவும் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியும் கொண்டு நின்றால், அது எப்போதும் தவறாததோர் இன்ப ஊற்றாகி, மனித வாழ்uை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்து விடும் (அத்தியாயம்-விந்தலை). இவ்வாறு ஷெல்லியைப் போல் காதலின் மூலம் அமர நிலை எய்தும் வழியைக் கூறும் பாரதி, ஷெல்லி தனது

  • எயினசகிடியா'னில் கூறியுள்ளதைப் போன்று , காதலானது

எந்த விதத் தடைமுடைகளையும் தாண்டி வெற்றி காணும் இயல்..,டையது என்பதையும், அதனால் மனிதனின் பலமே அதிகரித்து விடுகிறது என்பதையும், நூற்றிரண்டு மலைகளேச் சாடுkேs:ரம் நுண்ணிடைப் பெண்ணொருத்தி பணியிலே! 183