பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பாரதி தமிழ் புருஷார்த்தங்கள், அதாவது மானிட ஜன்மம் எடுத்ததி னின்றும் ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்த பயன்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதாகையால் அதனை விரித்துக்கூற முயலாமல், அதற்குச் சாதனமாகிய தெய்வ பக்தியை மாத்திரம் முதல் அத்யாயத்தில் கூறி கிறுத்திவிட்டு, மற்ற மூன்று புருஷார்த்தங்களையும், விளக்கி, திருவள்ளுவ காயனர் 'முப்பால் (மூன்று பகுதிகளுடையது) என்ற பெய ருடைய திருக்குறள் செய்தருளினர். ஆயிரத்து முன்னுாற்று முப்பது சிறிய குறட் பாக்களில் நாயனர் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலேயும் அடக்கிப்பாடியது மிகவும் அபூர்வ மான செய்கை என்று கருதப்பட்டது. இது கண்ட ஒளவைப் பிராட்டி வீட்டுப் பாலையும் கூட்டி நான்கு புருஷார்த்தங்களையும் ஒரே சிறிய வெண்பாவுக்குள் அடக்கிப் பாடினர். இந்த ஆச்சரிய மான வெண்பா பின்வருமாறு: 'ஈதலறம்; தீவினேவிட்டீட்டல் பொருள்; எஞ்ஞான்றும் காதலிருவர் கருத்தொருமித்-தாதரவு பட்டதே இன்பம்; பரனே கினேந்திம் மூன்றும் விட்டதே பேரின்ப வீடு.' இவ்வெண்பாவின் கருத்து யாதெனில், ஈதலாவது அருள் செய்தல் அல்லது கொடுத்தல் என்றும் பொருள்படும். அதாவது, உலகத்தாருக்குப் பயன்படும் வண்ணமாக நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் பண்ணிவிடுதல்; நமது பொருளாலும், வாக்காலும் மனத்தாலும், உடற் செய்கையாலும், பிறருடைய கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கினியன செய்தல்; பொருள் கொடுப் பது மாத்திரமே ஈகையென்று பலர் தவருகப் பொருள் கொள்கி ருர்கள். பிறர் பொருட்டாக நம் உயிரைக் கொடுத்தல் கொடை யன்ருே ? வைத்தியம் முதலிய சிகிச்சைகளால் பிறருக்குப் பிராண தானம் செய்தல் ஈகையன் ருே ? பொருள் முதலிய கலன்களேயெல் லாம் ஒருவன் தனக்குத்தானே சேகரித்துக்கொள்ளக்கூடிய திறமை அவனுக்கு ஏற்படும்படி அவனுக்குக் கல்வி பயிற்றுதல் தானமாகாதா ?