பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிருகங்களும் பகதிகளும் Í 19 அவன் செத்த பின், அவனே அந்த இடத்தில் ஸ்மாதிவைத்து, அந்த ஸமாதியில் ஓர் கோயில் கட்டி, அந்த மறவனேயே மாட சாமியாகச் செய்து அந்தப் பக்கத்துக் கிராமத்தார் கும்பிட்டு வருகிருர்கள். அந்தக் கோயிலில் வேடிக்கை பார்க்கும் பொருட் டாக கான் சில சினேகிதர்களுடன் போயிருந்தேன். அங்கே இரு நூறு, முந்நூறு கழு மரங்கள் காட்டி அவற்றில் ஆடுகளைக் கோத்து வைத்திருக்கிருர்கள். அந்த ஆடுகள் கழு மரங்களில் குற்றுயிராகத் துடித்து கொண்டிருக்கையிலே கான் பார்க்க வில்லை. அப்போது பார்த்தால் என் மனம் என்ன பாடுபட்டி ருக்குமோ, அறியேன். அவை செத்துப்போய் இரத்தமும் கிணமும் ஒழுகிக் கொண்டிருக்கையிலே நான் பார்த்தேன். அந்தக் காட்சியை கினைக்கும்போது, இப்போதும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. ஆஹா ! என்ன கொடும்பாவம் ! என்ன மஹாபாதகம் ! ' என்று கூறி, என் நண்பராகிய கோபாலபிள்ளே மிகவும் பரிதாபப்பட்டார். அப்போது நான் சொன்னேன் :- சில தினங்களின் முன்பு பாரளிகத்தின் பொம்மை ராஜாவாகிய ஷா சக்கிரவர்த்தி பாக் தாது நகரத்திற்குத் திரும்பி வந்தாராம். அதாவது. அவர் ஐரோப் பாவில் சுற்றுப் பிரயாணம் பண்ணிவிட்டுத் தம் தேசத்திற்கு வரு கையிலே பாக்தாது நகரத்திற்கு விஜயம் பண்ணிரைாம். அப் போது, அவருடைய வரவை அலங்கரிக்கும் பொருட்டாக ப்ாக் தாது நகரத்தில் 80 ஆடோ 100 ஆடோ வெட்டப்பட்டதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் தந்தி சமாசாரம் வந்திருந்தது. அதைப் படித்தபோது என் வயிற்றில் கெருப்புப் பந்தம் விழுந்தது போலிருந்தது. ஆனால், நமது தேசத்து சில்லரைத் தெய்வங் களின் கோயில்களிலே பூஜைதோறும், சில இடங்களில் 1,000 ஆடு 10,000 ஆடு வீதம் வெட்டப்படுவதை கினேக்கும்போது எனக்கு அடக்க முடியாத கோபமுண்டாகிறது. " திருநெல்வேலிக்கருகே குரங்கிணி யம்மன் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. அங்கு வருஷோத்ஸவ காலங்களில் கணக்கில்லாத ஆடுகள் வெட்டுப்படும் என்று கேள்விப் படுகிறேன்.